Wednesday, 13 April 2016

தனிமையின் தவிப்பு



என்னவனே என்னவனே
என் இனிய மன்னவனே
எனை ஆளும் வல்லவனே
சொர்ப்பனத்தில் நான் வாழும்
சோகத்தினை அறிவாயோ.?



பேதை இவள் உள்ளத்திலே
பேரின்பம் தந்துவிட்டு இட்ட
மணமாலை காயமுன்னே
மங்கை எனை வாடவிட்டு
தொலைதூரம் போனவனே



சிட்டாகச் சிறகடித்து வட்டமிட்டு
பறந்து வந்தேன் மொட்டாக நான்
இருக்க தேன் குடிக்கும் வண்டாக
வந்தவனே, எனை முத்தாக அள்ளி
அத்தானும் ஆனவனே



இந்த சிட்டின் சிணுங்கல்கள்
கேட்கல்லயோ உன் காதுகளில்
ஐந்து வருடங்கள் ஆனந்தமாய்
காத்திருந்தேன் இப்போ ஐந்து
நொடிகூட காத்திருக்கமுடியல்லயே



பிஞ்சு நெஞ்சினிலே ஏதோ நஞ்சு
கலந்தது போல் என்னை மிஞ்சி
எனக்குள்ளே ஏதோ நடக்குதய்யா
இந்த வஞ்சி உனையன்றி கொஞ்ச
கெஞ்ச யாரிருக்கா




சூரியன் காணா தாமரை போல்
சுருங்கி கிடக்குதய்யா என் இதயம்
சூட்சமம் அறிந்த என் சூரியனே
உன் உதயம் எனக்கு உயிர்ப்பிடமே !

No comments:

Post a Comment