ஆஞ்சான் கயிற்றில் ஊஞ்சல் கட்டி
ஆடும் உனக்கு,.... தளத்தில் நின்று
தாவான் கயிற்றை பற்றிப் பிடிக்கும்
சிறுபிள்ளையின் தவிப்பு எப்படி புரியும்,
கொக்கான் வெட்டிலே குரங்குப் பாய்ச்சல்...
ஆடிவிட்டு பிட்டுக்குழலாட்டம் நானோ
கைவிரல்களைப் பற்றி ஒன்றொன்றாய்
சேர்க்கின்றேன், ..நீயோ அரக்கல் என்று
சொல்லி அதாப்பி விளையாடுகின்றாய்,
வழிதெரியா விழியோரம் கண்ணீரும்
கசிந்தோட கருணை என்ற பெயரினிலே
குங்கிலியத்தை உருக்கி என் கண்களிலே
ஊற்றுகின்றாய் கண்ணீரை நிறுத்தவென்று
ஆனால் நானோ இப்ப தாச்சியே இல்லாமல்
கிளித்தட்டு ஆடுகின்றேன் .......................... !!!
ஆடும் உனக்கு,.... தளத்தில் நின்று
தாவான் கயிற்றை பற்றிப் பிடிக்கும்
சிறுபிள்ளையின் தவிப்பு எப்படி புரியும்,
கொக்கான் வெட்டிலே குரங்குப் பாய்ச்சல்...
ஆடிவிட்டு பிட்டுக்குழலாட்டம் நானோ
கைவிரல்களைப் பற்றி ஒன்றொன்றாய்
சேர்க்கின்றேன், ..நீயோ அரக்கல் என்று
சொல்லி அதாப்பி விளையாடுகின்றாய்,
வழிதெரியா விழியோரம் கண்ணீரும்
கசிந்தோட கருணை என்ற பெயரினிலே
குங்கிலியத்தை உருக்கி என் கண்களிலே
ஊற்றுகின்றாய் கண்ணீரை நிறுத்தவென்று
ஆனால் நானோ இப்ப தாச்சியே இல்லாமல்
கிளித்தட்டு ஆடுகின்றேன் ..........................

No comments:
Post a Comment