Wednesday, 1 August 2012

அனுபவதின் புலம்பல்!***


வீட்டை விட்டு வெளியே வந்தேன்
வேதம் சொன்ன கதையை கேட்டேன்
வெக்கப்பட்டு தலை குனிந்தேன்
வேதனையில் வெம்பி நின்றேன்
மதியை நசுக்கும் விதியை கண்டேன்

மாயக்கண்ணன் வழியில் சென்றேன்
மங்கையரின் மனதை வென்றேன்
மகுடிக்கு மயங்கா பாம்பாய் எழுந்தேன்
சாமி என்ற சாத்திரத்தை
சாடிக்குள்ளே அடைக்கச் சொன்னேன்
சாதனைகள் புரிபவரை
தலையில் வத்து ஆடச்சொன்னேன்
விதியே என்ற சதியைக் கொன்றேன்
விடிவுக்காக கவிதை சொன்னேன்
விழித்து நீயும் எழுந்தாய் என்றால், உன்
மனதை நானும் வென்றேன் என்பேன்
விழிக்க நீயோ மறுத்தால் நான்.....

No comments:

Post a Comment