கொட்டுப்பூச்சி கட்டிலிலே
மெட்டிபோட்டுத் தூங்குதே
கட்டுப்பாட்டை நானிழந்து
வட்டமிட்டு ஆடுறேன்
பட்டாம்பூச்சி கண்ணெதிரில்
சட்டை போட்டு சுற்றுதே
பார்த்த கண்கள் காலையிலே
கண்ணிவெடியானதே
சிட்டுக்குருவி பொட்டு வைத்து
புடவை கட்டி நடக்குதே
கட்டெறும்பு நெஞ்சுக்குள்ளே
பட்டாசு போடுதே
குட்டி நிலா கால் முளைத்து
ஸ்கூட்டியிலே போகுதே
எனை மறந்து மதிமயங்கி என்
வேஷ்டி காற்றில் பறக்குதே.

No comments:
Post a Comment