Thursday, 16 June 2016

ஈரம் காயாத வாசம் நம் பாசம்


    உலாவந்த நிலாவில் கறைபடியும்
     என நினைக்கின்றாளே பாவம், என்
     நினைவெல்லாம் வலிக்குமென்று
     மறந்து போவதில் என்ன நியாயம்

    தொட்டெடுத்த வாசம் இன்னும்
     ஆறாத போதும் அவள் முத்தமிட்ட
     ஈரம் என்னில் காயாத போதும்
     சத்தமின்றி இருப்பதென்ன மாயம்

    எத்தனையோ வார்த்தை சொல்லி
     வேகவைத்தபோதும் அத்தனையும்
     தாண்டி அத்தைமகள் என்றுசொல்லி
     அவளை அள்ளிக்கொண்டேன் நானும்

    இத்தனையும் நான் பார்த்து விட்டேன்
     இனியும் என்ன வேண்டும் இதற்கு மேல்
     நான் என்ன சொல்ல,... இதுவும் கடந்து
     போகும், ஏன் எதுவும் கடந்து போகும்....!

No comments:

Post a Comment