நான் அன்பெனும் தூரிகையால்
ஒரு ஓவியம் வரைந்தேன்
நீ உன் விழியெனும் மொழியாலே
காதல் காவியம் என்கிறாய்
நான் கனவென்னும் கற்பனையில்
பல கவிதைகள் வடித்தேன்
நீ உன் கருகொண்ட உணர்வாலே
காதலாய் வளர்கிறாய்
கருத்துச் சொல்ல வந்தவளே, என்
இதயத்தில் கருவாகி நிற்கிறாள்
மறுப்பு சொல்ல நினைக்கமுன்னே
என் மனதினை திருடிவிட்டாள்
கறுப்பாக இருந்தாலும் ரொம்ப
பொறுப்பாகப் பேசுகின்றாள்
நான் வெறுப்பேதும் காட்டாமல்
விழுந்துவிட்டேன் அவளிடமே
என் அன்பே எனதுயிரே இதைக்
கொஞ்சம் நீ கேளு ...................
சொந்தமென நீயிருந்தால் எனக்கு
சொத்துச் சுகம் தேவையில்லை
பந்தமெனெ நீ வந்தால் உன்
மடியே எனக்குலகம்..........!!!
ஒரு ஓவியம் வரைந்தேன்
நீ உன் விழியெனும் மொழியாலே
காதல் காவியம் என்கிறாய்
நான் கனவென்னும் கற்பனையில்
பல கவிதைகள் வடித்தேன்
நீ உன் கருகொண்ட உணர்வாலே
காதலாய் வளர்கிறாய்
கருத்துச் சொல்ல வந்தவளே, என்
இதயத்தில் கருவாகி நிற்கிறாள்
மறுப்பு சொல்ல நினைக்கமுன்னே
என் மனதினை திருடிவிட்டாள்
கறுப்பாக இருந்தாலும் ரொம்ப
பொறுப்பாகப் பேசுகின்றாள்
நான் வெறுப்பேதும் காட்டாமல்
விழுந்துவிட்டேன் அவளிடமே
என் அன்பே எனதுயிரே இதைக்
கொஞ்சம் நீ கேளு ...................
சொந்தமென நீயிருந்தால் எனக்கு
சொத்துச் சுகம் தேவையில்லை
பந்தமெனெ நீ வந்தால் உன்
மடியே எனக்குலகம்..........!!!

No comments:
Post a Comment