Monday, 16 April 2012

பாசத்தில் அடைந்த மோட்ஷம் ***



மோசம் போகாமல் நான்
மோட்ஷம் அடைந்தேனே
பாசம் தனை அள்ளி
பருகக் கொடுத்தாளே
பாவி மவபுள்ள ஏனோ
எனை பாடா படுத்கிறாள்
வேசம் போடாமல் அவள்
வெளுத்துக் கட்டுகிறாள்
ஊடல் எனச் சொல்லி என்
உயிரைக் குடிக்கின்றாள்
கோபம் கொண்டால் நான்
குமுறி அழுகின்றாள்
தாயே உனை நான்
தயவாய் கேட்கின்றேன்
ஓயா அலைபோல் எனை
உருட்டி எடுக்காமல்
நீ கூட இருந்து என்
குறையையை தீர்ப்பாயோ
வாடா மலரே என்னை
வாரி அணைப்பாயோ .... ???




No comments:

Post a Comment