Monday, 16 April 2012

மன்மதனும் தேவதையும் ***



தேவலோக மன்மதனும்
பூலோக தேவதையும்
நட்பென்னும் மேடையிலே
நாடகங்கள் அரங்கேற்றி
தப்பாக இருந்தாலும்
தப்பாமல் நடிப்பதுயேன்
உருவம் தந்த மன்னவனும்
உருவம் இல்லா ஓவியமும்
கர்வம் தனை மறந்துவிட்டு
கருணை கொண்ட நெஞ்சோடு
கவிதை பல பாடுவதேன்
காற்றில் வந்த காவியமாய்
நேற்றுவரை நினைத்திருந்தேன்
தூத்திவிட்டு சென்றாலும் நெஞ்சில்
ஊற்றெடுக்க காத்திருந்தேன்
தூக்கத்திலும் பார்த்திருந்தேன்
கனவா நீ வரவில்லை எனக்கு
சுகம் ஒன்று தரவில்லை, ஆனால்
மறக்க என்னை முடியாமல் என்
மனமடியில் வந்து விழுந்தாயே
கலக்கம் கொண்ட என் மனசோ
இன்று இறக்கை இன்றி பறக்குதடி..




No comments:

Post a Comment