Saturday, 26 January 2013
மாயம் போன நெஞ்சும் சாயம் போன சேலையும்
என்னுயிரே என் நிலையும்
உன் நிலையும் ஒன்றோடி
உயிரும் உயிரும் ஒன்றாய்
சேர்ந்து உரசிக்கொள்ளுதா
தொண்டைக்குழியில் ஒற்றை
வார்த்தை சிக்கித்தவிக்குதா
உதட்டின் மேலே ஊறும் எச்சி
ஏனோ வறண்டு போகுதா
தொட்டுத் தழுவாத போதும்
நெஞ்சில் மொட்டு மலருதா
கட்டியணைக்காமல் மேனி
வேர்த்துக்கொட்டி உச்சி கூசுதா
கண்ணை மூடித்தூங்கும் போது
எந்தன் வாசம் தட்டியெழுப்புதா
சொர்க்கவாசல் கதவைத் திறக்கும்
சாவி எங்கள் முத்தமானதா
மொத்த உணர்வைக் கேட்டு உந்தன்
பட்டுச்சேலை சாயம் போகுதா
எனக்கானவளே உன்னவனின்
உணர்வில் உண்மை உள்ளதா
உண்மையென்றால் ஓடிவந்து
ஒட்டிக்கொள்ளவா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment