Tuesday, 2 August 2016

கறுப்பழகி நீயெங்கே கண்கலங்கி நானிங்கே ***



செத்தமீன் துடிக்குதென்று,.....நீ
செதில் நோண்டி அறுக்கயிலே
உந்தன் பொத்தான் அவிழுதென்று
பித்தம் பிடித்தவள் போல்
பெரும் சத்தம் போட்டு
ஒற்றை விரலால் ஒடிப்பிடித்து எனை
ஓரக்கண்ணால் பார்த்தகதை,
செத்துப்போனாலும் நெஞ்சை
விட்டு இத்துப்போகாதடி

சாரைப்பாம்பு ஒன்று சருகுக்குள்ளே
போகுதென்று காராம் பசுவாட்டம்
பாய்ந்து நீ ஓடயிலே, கொக்கைசத்தகம்
கொழுவி இழுத்து உன் பட்டுப்பாவாடை
சொட்டுக்கிழிந்ததென்று எனை கட்டி
அழுதகுரல் எட்டுத்திசையிலினும்
இன்றும் என் காதில் கேட்டுதடி..

தொலைக்காட்சி பார்ப்பதுபோல் ஒரு
காட்சி ஓடுதென்று ம(று)ணக்காட்சி
எப்பவென்று பெரியாச்சி சிரிக்கயிலே
பெத்தாச்சி கைபிடித்து உன்னுணர்வை
அத்தாட்சிப்படுத்தினியே . இப்போ
என் பெத்தாசியும் இல்லை,......நீ
கொடுத்த அத்தாச்சியும் இல்லை
அந்த பெத்தாச்சியும் செத்துப்போச்சு
இந்த மனச்சாட்சியும் இத்துப்போச்சு !


No comments:

Post a Comment