தாகத்திற்கில்லை தண்ணீரு
தலைக்கு தெளிப்பது பன்னீரு
வயிற்றுக்கில்லை குடினீரு
நெற்றி நிறைய திருநீறு
சாமி போட்ட கணக்கென்று
சாட்டுச் சொல்லும் சந்ததியே
சாணியைதான் பிடித்து வைத்து
சாமி என்று சொல்லுகின்றாய்
ஏழை படும் படும்பாட்டை
எண்ணிப்பார்க்க மறந்தது ஏன் ???

No comments:
Post a Comment