Wednesday, 21 March 2012

காதலாய் மலர்ந்த நட்பு

நட்பே கொஞ்சம் பாராய்
உண்மை தன்மை கேளாய்
வணக்கம் என நான் சொல்ல
வருக வருக நட்பேயென்றாய்
நலமா என நான் கேட்க்க
நகைத்து நீயும் வரவேற்றாய்
நண்பர் நாமே என்று சொல்லி
நாள் தோறும் பேசவைத்தாய்
இருவர் மட்டும் உலகினிலே
இருப்பதாக கவி படைத்தாய்
உந்தன் உதயம் வேண்டுமென
உருகி உருகி கதை பயன்றாய்
முகத்தை நீயோ பார்ப்பதர்க்கு
முனிவன் போலே தவம் பூண்டாய்
முகத்தை காட்ட வந்த என்னில்
அகத்தை ஏனடி அள்ளிவிட்டாய்.?

No comments:

Post a Comment