Wednesday, 21 March 2012

தூக்கணாங்குருவியின் துணிச்சல் ***


ரவுடி பொண்ணு ஒன்று என்
கனவில் வருகிறாள்
என்னை நாரு நாராக
கிழித்து எறியப் பார்க்கிறாள்
சொல்லிலே வில் ஏந்தி
என்னை குத்தப் பார்க்கிறாள்
நான் தான் மகா ராணி என்று
உரக்கக் கத்திக் கூறுகிறாள்
போருக்கு வந்தவளே என்னை
சிறு பொடியன் என நினைத்தாயோ
ராட்டிணமா சுழற்றி உன்னை நடு
ஆற்றினிலே எறிந்திடுவேன்
தூக்கணாங்குருவி போல் என் நெஞ்சில்
கூடுகட்டி வாழ்வதென்றால் வா,
இல்லை மூக்கணாம் கயிறு கட்டி என்னை
அடக்கிட நினைத்தாய் என்றால்
உன்னை நாக்கணம் புழுவைப் போல்
மெல்ல நசுக்கி எறிந்திடுவேன்
படமெடுக்கும் பாம்பிலே படுத்திருந்து
பாயாசம் குடிப்பவன் நான்
பச்சைக் கிளியடி நீ எனக்கு உன்னை
பிச்சு எறிவேனோ கூறெனக்கு ........
................................... போடி போடி !!!

No comments:

Post a Comment